Categories
தேசிய செய்திகள்

இந்தியன் ரயில்வேயில் 3 லட்சத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள்….. மத்திய மந்திரி சொன்ன முக்கிய தகவல்….!!!!!

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ரயில்வே நிலையத்தில் இருக்கும் காலி பணியிடங்கள்  குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்தியன் ரயில்வே துறையில் 3 லட்சத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் இருக்கிறது. அதன்படி குரூப் ஏ பிரிவில் 2021 காலி பணியிடங்கள் இருக்கிறது.

இதனையடுத்து குரூப் பி பிரிவில் 858 காலி பணியிடங்கள் இருக்கிறது. மேலும் குரூப் சி பிரிவில் 3,12,944 காலி பணியிடங்கள் நிரப்பாமல் இருக்கிறது என்று கூறியுள்ளார்.இதேபோன்று கிழக்கு ரயில்வே குரூப் சி பிரிவில் 30,141 காலி பணியிடங்களும், வடக்கு ரயில்வேயில் குரூப் சி பிரிவில் 38,754 காலி பணியிடங்களும், மேற்கு ரயில்வேயில் முதல் இரண்டு இடங்களில் 30,476 காலி பணியிடங்களும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

 

Categories

Tech |