Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆலோசனை கூட்டம்….. செய்தியாளர்கள் சந்திப்பு…. ரஜினி போருக்கு தயார் …!!

நடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கின்றார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5 ஆம் தேதி  மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து, கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அரசியலுக்கு வருவேன் என்ற அறிவிப்பைஎடுத்து 3ஆவது முறை நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 1.30 மணி நேர ஆலோசனைக்கு பின் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஒரு விஷயத்தில் ஏமாற்றமே என்று தெரிவித்தார்.

ரஜினியின் என்ன ? ஏமாந்தார் என்பது குறித்த பல்வேறு கேள்விகளை அரசியல் அரங்கில் விவாதப்பொருளாக மாறியது. இதில் ரஜினி தேர்தலில் போட்டியிட்டாலும் முதல்வர் வேட்பாளர் வேறு ஒருவர் என்று கூறினார் என்றும் இதற்க்கு மன்ற நிர்வாகிகள் சம்மதிக்காததால் இதையே ஏமாற்றம் என்று குறிப்பிட்டதாக சொல்லப்படுகின்றது. இதனிடையே மீண்டும் இன்று காலை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேச ரஜினிகாந்த் சந்தித்து பேச இருக்கின்றார்.

அதே போல தனியார் ஹோட்டல் ஒன்றில் பத்திரிகையாளரை சந்திக்கதிட்டமிட்டுள்ள ரஜினிகாந்த தனது முழுநேர அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகின்றது. நேற்று ரஜினி அரசியல் ஆலோசகர் தமிழருவி மணியன் ரஜினியின் இல்லத்தில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |