வெஸ்ட் இண்டீஸ் – சவுத் ஆப்ரிக்கா அணிகள் மோதிய போட்டியில் சவுத் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி பெற்றது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக T20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ஆம் தேதி முதல் மும்பையில் நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் என ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன. நேற்று நடந்த 4 ஆவது போட்டியில் ஸ்ரீலங்கா லெஜெண்ட் அணியை வீழ்த்தி இந்திய லெஜெண்ட் அணி வெற்றி பெற்றது.லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணி ஜான்டி ரோட்ஸ் தலைமையிலான சவுத்ஆப்ரிக்கா லெஜெண்ட் அணியை மோதின.
மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய் பாட்டீல் விளையாட்டு அகாடமி மைதானத்தில் 7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சவுத் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அதிகப்பட்சமாக கங்கா 31 ரன்னும் , பவல் 30 ரன்னும் எடுக்க அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தத்த்து. சவுத் ஆப்பிரிக்கா சார்பில் ஹாரிஸ் 3 விக்கெட்டும் , மோர்கெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
144 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சவுத் ஆப்பிரிக்கா தொடக்க வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 44 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. 5ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஜான்டி ரோட்ஸ் – அல்பி மோர்கல் வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணியின் வெற்றிவாய்ப்பை பறித்தனர்.
இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. 5 ஆவது விக்கெட்டுக்கு 102 ரன் குவித்த இந்த ஜோடி அணியை வெற்றி பெற வைத்தது. 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 146 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜான்டி ரோட்ஸ் 40 பந்துகளில் 53* ரன்னுடனும் , அல்பி மோர்கெல் 30 பந்துகளில் 54* ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அல்பி மோர்கெல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.