Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. ரயில்வே துறை வெளியிட்ட புதிய வசதி…!!!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் குறைந்த கட்டணத்தில் அனைத்து வசதிகளையும் அளிக்கிற ரயில் சேவை பயணங்களை தொலைதூர பயணங்களுக்கு தேர்ந்தெடுக்கின்றனர். தற்போது ரயில் டிக்கெட் பெறுவதற்கு ரயில் நிலையம் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு பதிலாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக எளிதாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஒரு மாதத்திற்கு முன்பாக கூட நீங்கள் டிக்கெட் புக்கிங் செய்து கொள்ள முடியும். இப்படி டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இடையில் போர்டிங் பாயிண்ட்டை மாற்ற நினைத்தால் அதை எளிதாக மாற்றிக் கொள்ளலாம். தற்போது ரயில்வே துறை அதற்கான வசதியை அளித்துள்ளது.

மேலும் இதற்காக எந்த விதமான சிறப்பு கட்டணமும் வசூலிக்கபடாது. அதாவது அவசர காரணங்களுக்காக சில ரயில் பயணிகள் போர்டிங் பாயிண்ட்டை மாற்ற முயற்சி செய்கின்றார்கள். இதனை கருத்தில் கொண்டு ஐ.ஆர்.சி.டி.சி இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக போர்டிங் பாயிண்ட்டை மாற்ற விரும்பும் பயணிகள் மாற்றிக்கொள்ள வேண்டும்  என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஆன்லைன் மூலமாக புக் செய்வதற்கு மட்டுமே இந்த வசதி அளிக்கப்படுகிறது. போர்டிங் பாயிண்ட்டை ஒரு முறை மட்டுமே மாற்ற வாய்ப்பளிக்கப்படும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளவும்.

Categories

Tech |