நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அதிலும்சில துறைகளில் காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அவற்றை விரைவில் நிரப்ப வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் ரயில்வேயில் மூன்று லட்சத்திற்கும் மேலான பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார் கேவின் கேள்விக்கு பதில் அளித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்படி குரூப் ஏ பிரிவில் 2021 காலி பணியிடங்களும், குரூப் பி பிரிவில் 858, குரூப் சி 3,12,944 இடங்களும் நிரப்பப்படாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.