Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…. வெளியானது good news….!!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த வருடம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுபுடன்  ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் காரணமாக வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் டோக்கன் வழங்கி ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Categories

Tech |