Categories
தேசிய செய்திகள்

மனைவிக்கு கழுதையை பரிசளித்த கணவன்…. இதுதான் காரணமாம்?…. ஆச்சரிய சம்பவம்….!!!!

பொதுவாக திருமணத்திற்கு பின் தனக்கு வரும் மனைவிக்காக கணவர் ஏதாவது பரிசளிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் பாகிஸ்தான் நாட்டில் அஸ்லான் என்பவர் தன் மனைவி வாரிஷாவிற்கு திருமண பரிசாக கழுதையை கொடுத்திருக்கிறார்.

ஏனெனில் தனது மனைவிக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும் எனவும் கழுதைகள் தான் உலகிலேயே கடின உழைப்பாளி மற்றும் அன்பான விலங்கு என்பதால் அதை பரிசளித்ததாகவும் அஸ்லான் தெரிவித்து இருக்கிறார்.

இவ்வாறு திருமணத்திற்கு பின் மனைவிக்கு கழுதையை பரிசளித்த கணவரின் செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. தற்போது இருவரும் கழுதையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |