டிசம்பர் ஒன்பதாம் தேதி வெளியான திரைப்படங்கள் தள்ளாடி வருகின்றது.
சென்ற டிசம்பர் 9-ஆம் தேதி ஈவில், DR 56, எஸ்டேட், குருமூர்த்தி, நாய் சேகர் ரிட்டன்ஸ், ஸ்ரீ ராஜராஜ மணிகண்டன், வரலாறு முக்கியம், விஜயானந்த் உள்ளிட்ட 8 திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் 10-ம் தேதி ரஜினியின் பாபா திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டது. நேற்று வெளியாகிய பாபா திரைப்படம் கூட வசூலில் சில பல லட்சங்கள் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தெரிவிக்கின்றது.
ஆனால் சென்ற டிசம்பர் 9ஆம் தேதி வெளியான புதிய திரைப்படங்கள் அனைத்தும் வசூலில் தள்ளாடி வருவதாக கூறப்படுகின்றது. ஏனென்றால் படம் வெளியான நாளில் மாண்டஸ் புயலின் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக மக்கள் யாரும் வெளியே வரவில்லை. நேற்று சில காட்சிகளுக்கு மட்டும் வந்திருந்தார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இருப்பினும் பதிவுகள் மோசமாக இருக்கின்றது. பொதுமக்கள் மழையின் காரணமாக வீடுகளிலேயே முடங்கியுள்ளனர் குறிப்பிடத்தக்கது.