Categories
சினிமா தமிழ் சினிமா

எதிர்நீச்சல்-கோலங்கள் வித்தியாசம் என்ன…? பதில் அளித்த இயக்குனர்… பெண்கள் மகிழ்ச்சி..!!!

கோலங்கள் மற்றும் எதிர் நீச்சல் தொடர் குறித்து இயக்குனர் பதில் அளித்துள்ளார்.

இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் வெளியாகி உள்ள கோலங்கள் தொடர் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது எதிர் நீச்சல் தொடரும் வெற்றி நடை போடுகின்றது. இந்த நிலையில் எதிர்நீச்சல் தொடரின் வசனகர்த்தா ஸ்ரீவித்யா கோலங்களில் வரும் பெண்களுக்கும் எதிர்நீச்சலில் வரும் பெண்களுக்கும் என்ன வித்தியாசம் என இயக்குனரிடம் கேட்கின்றார்.

இதற்கு இயக்குனர் பதில் அளித்துள்ளதாவது, கோலங்களில் வரும் அபி, ஆனந்தி, ஆர்த்தி, உஷா, கங்கா, மேனகா உள்ளிட்டோர் வீட்டில் சுதந்திரமாக இருந்து வெளியே சுதந்திரத்தை தேடியவர்கள். எதிர்நீச்சலில் வரும் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி உள்ளிட்டோர் வீட்டில் சுதந்திரத்தை இழப்பதால் தங்கள் சுயத்தையும் இழக்கின்றார்கள்.

இதனால் வெளியிலேயும் என்ன செய்வதென தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்கள். ஆகையால் முதலில் அவர்கள் வெளியே வருவார்கள். சுயத்தை மீட்பார்கள். அப்படி பார்த்தால் கோலங்கள் பெண்களும் சரி எதிர் நீச்சல் பெண்களும் சரி வெற்றி பெற்றவர்களே என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |