Categories
Uncategorized

3 மெகா….. அசத்தல் திட்டம்…… திமுக….. அதிமுகவிற்கு மெர்சல் காட்டிய ரஜினி…..!!

சென்னையில் லீலா பேலஸில் அரசியல் பயணம் குறித்த கேள்விகளுக்கு ரஜினிகாந்த் விளக்கம் அளித்து வருகிறார். அதில், தனது கட்சிக்கென  மூன்று முக்கிய திட்டங்கள் இருப்பதாக கூறினார். அவையாவன,

திட்டம் 1:

தமிழகத்தில் இருக்கக்கூடிய 2 மிகப் பெரிய கட்சிகளில் ஒன்று திமுக, மற்றும் அதிமுக இந்த இரண்டு கட்சிகளிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகள் இருக்கின்றன.  ஐம்பதாயிரம் பதவிகளும் தேர்தல் நேரத்தில் வேண்டுமானால் தேவைப்படலாம். ஆனால் மற்ற நேரங்களில் ஒருபோதும் தேவைப்படாது.

தேர்தல் நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் இந்த பதவிகளில் இருக்கக்கூடியவர்கள் அரசின் டெண்டர், கான்ட்ராக்டர் உள்ளிட்டவற்றை எடுத்து அதில் ஊழல் செய்து வருகின்றனர். பலர் இதனை தொழிலாகவே செய்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

இந்த தவறு நமது கட்சியில் நடைபெறக்கூடாது. ஆகையால் தேர்தல் நேரத்தில் மட்டும் வேண்டிய பதிவை வைத்துக்கொண்டு மற்ற நேரத்தில் அவர்களை நீக்கிவிட வேண்டும் என்று அவர் தெரிவித்த அவர், அவர்கள்  கட்சியில் இருந்து முழுமையாக நீக்கி விடமாட்டார்கள் நேரத்தில் மட்டும் தான் அவர்களுடைய பதவி செல்லும். மற்றைய காலகட்டங்களில் அவர்கள் சாதாரண கட்சி உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று தெரிவித்தார்.

 

திட்டம் :2

சட்டசபையில் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்றால் அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் அந்த அளவிற்கு தான் இருப்பார்கள். மற்றவர்களெல்லாம் 60, 65 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தான். ஆகையால் எனது கட்சியில் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் அதிலும் படித்தவர்கள், பெண்கள் இவர்களுக்காக 60% MLA, MP சீட்களுக்கான  இடம் ஒதுக்கித் தருவதாகவும், ஒவ்வொரு முறை தேர்தலின்போதும் புதிய புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

ஒரே நபர்கள் பதவியில் அமர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் சமூக சேவையில் ஈடுபட்டவர்களின் வீட்டிற்கே சென்று சந்தித்து அவர்களையும் நம்மோடு இணைக்க தொடர்ந்து உழைப்பேன் என்றும்  தெரிவித்தார்.

 

திட்டம் 3:

பொதுவாக தேசியக் கட்சிகளைத் தவிர இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில கட்சிகளிலும் ஆட்சி மற்றும் கட்சியினுடைய தலைவர்கள் ஒருவராகவே இருப்பர். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பதவியில் இருப்போர் தவறு செய்யும் பொழுது அதனை தட்டிக் கேட்க இயலாமல் போகிறது.

ஆட்சியில் இருப்பவர்களிடம் மக்கள் செல்லும் கேட்க சென்று உரிய பதில் கிடைக்காத பட்சத்தில்,அவர்கள் மற்றொருபுறம் கட்சி தலைவர்களிடம் சென்றாலும் அங்கும் அவர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களது கீழே அனைத்தும் நடைபெறுகிறது.

இதனால் மக்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. ஆகையால் நமது கட்சியை பொறுத்தவரை கட்சித் தலைமை வேறாக இருக்க வேண்டும். ஆட்சித் தலைமை வேறாக  இருக்க வேண்டும். ஆட்சி ஒருபுறம் நடக்க நமது ஆட்சிக்கு நமது கட்சியே எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் தான் தவறு செய்பவர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ரஜினியின் இந்த 3 திட்டங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |