2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவேன் என்று கூறியதாக நடிகர் ரஜினிகாந்த தெரிவித்துள்ளார்.
இன்று காலை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார் ரஜினிகாந்த். பின்னர் சென்னை போயஸ் கார்டன் வீட்டில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் லீலா பேலஸ் ஹோட்டலுக்கு சென்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இங்கே என்னுடைய அழைப்பை ஏற்று இங்கே வந்திருக்கும் ஊடக நண்பர்களுக்கு என்னுடைய முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கே தெரியும் இந்த சந்திப்பு எதற்கு அப்படி என்று சில தினங்களுக்கு முன்பு நான் மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசும்போது பேசி விட்டு வெளியே வந்து மீடியாக்களுக்கு எல்லாமே நடந்தது எல்லாத்துக்கும் திருப்தி, எனக்கு மட்டும் ஒரு விஷயத்தில் ஒரு திருப்தி இல்லை. ஒரு தனிப்பட்ட முறையில் வந்து ஏமாற்றம் அப்படின்னு நான் சொன்னேன் அது வந்து வெளியில் பலவிதத்தில் வதந்தியாக பரவியது. நான் இதற்கு ஒரு ஒரு முற்றுபுள்ளி வைக்கனும் அப்படின்னு சொல்லிட்டு தான் இந்த ஒரு சந்திப்பு என்றார்.நான் அரசியலுக்கு வரணும்னு சொல்லி ஆசைப்படுற மக்களுக்கும், ரசிக பெருமக்களுக்கும் ஒரு கண்ணோட்டம் என்றார்.
மேலும் 1996 லிருந்து 25 வருஷமா ரஜினிகாந்த் அரசியலுக்கு வர்ராரு வர்ராரு அப்படி சொல்லிட்டே இருக்காங்க. நான் முதல்ல வந்து வர அரசியலுக்கு வரன்னு சொன்னது 207 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி தான். இனிமேலாவது தயவு செஞ்சு 25 வருஷமா அரசியலுக்கு வர்ராரு அப்படின்னு சொல்லிட்டு இருக்காதீங்க. இனி யாருன்னு சொல்ல மாட்டாங்கன்னு நினைக்கிறன் என்று கூறினார்.