Categories
அரசியல்

50 வருட ஆட்சி போதும்….. இப்ப இல்லைனா…? எப்பவும் இல்லை…… ரஜினி பேட்டி….!!

சென்னையில் லீலா பேலஸ் மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு தெரிவித்தார், 

1996 முதலே தான் அரசியலுக்கு வரப்போவதாக பல வதந்திகள் பரவி வந்தாலும், 2017 டிசம்பர் மாதம் தான் முதன்முதலில் தான் அரசியலுக்கு வர இருப்பதாக தெரிவித்தேன் என்று தெரிவித்தார்.

மேலும் தனது கட்சிக்கு மூன்று முக்கிய திட்டங்கள் இருப்பதாகவும் இதன் மூலம் தமிழகத்தில் சிஸ்டத்தை சரி செய்து, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்று தெரிவித்தார். அவையாவன, தேவையான அளவிற்கே  கட்சி உறுப்பினர்களை வைத்து செயல்படுத்தப் போவதாகவும்,

50க்கும் குறைவான வயதுடையவர்கள் அதிலும் படித்தவர்கள் பெண்களுக்கு 60% இடம் அளிப்பதாகவும், மீண்டும் மீண்டும் ஒரே நபருக்கு பதவியில் இருக்க வாய்ப்பே அளிக்கக்கூடாது என்றும் தெரிவித்தார். மூன்றாவதாக கட்சிக்கும், ஆட்சிக்கும் வெவ்வேறு தலைமை ஏற்கும் என்றும் இதில் கட்சியின் தலைமையை நான் ஏற்ப்பேன்,

ஆட்சியின் தலைமையை வேறொருவர்  ஏற்பார். முதலமைச்சர் பதவியின் மேல் எனக்கு என்றைக்கும் ஆசை கிடையாது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 50 வருடகாலமாக 2 மிகப் பெரிய ஆளுமைகள் தமிழ்நாட்டை ஆண்டு விட்டன.

அந்த இரண்டு ஆளுமைகள் போன பிறகு சிஸ்டம் முற்றிலுமாக தமிழகத்தில் சிதைந்து விட்டது. இந்த 50 வருட திராவிட ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த இதுவே சரியான நேரம். இப்போது அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றால்,

இனி எப்போதும் ஏற்படுத்த முடியாது என்பதை மக்கள் நினைவில் கொண்டு தங்களுக்கு ஆதரவளிக்குமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சினிமா துறையில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த இவர் அரசியலிலும் சூப்பர் ஸ்டாராக வளம் வருவாரா? என்பது இன்னும் கேள்விகுறியாகவே உள்ளது. அதற்கான காரணம் மக்கள் முதலில் எழுச்சி பெறட்டும், அதன்பிறகு நான் வருகிறேன் என்று அவர் கூறியது தான்.

Categories

Tech |