விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின்ஆறாவது சீசன் கிட்டத்தட்ட 60 நாட்களைக் கடந்த விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட தற்போது பிக் பாஸ் வீட்டில் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் 14 போட்டியாளர்கள் இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 2 பேர் எலிமினேஷன் செய்யப்படுவார்கள் என கமல்ஹாசன் அறிவித்திருந்த நிலையில் சனிக்கிழமை ராம் வெளியேற்றப்பட அவரை தொடர்ந்து நேற்று பிக் பாஸ் வீட்டை விட்டு ஆயிஷா வெளியேறினார்.
சின்னத்திரை சீரியல் நடிகை ஆன இவர் பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்டு இருந்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று நேற்று எலிமினேஷன் செய்யப்பட்டார். இந்நிலையில் அவரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் ஒரு நாளைக்கு ரூ. 28 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டில் 63 நாட்கள் இருந்த நிலையில் மொத்தமாக 10 லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தை இவர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.