45 வயதில் எனக்கு பதவி ஆசை இல்லை, 68 வயதில் எனக்கு பதவி ஆசை வருமா என்று ரஜினிகாந்த் அதிரடியாக பேசியுள்ளார்.
இன்று காலை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார் ரஜினிகாந்த். பின்னர் சென்னை போயஸ் கார்டன் வீட்டில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் லீலா பேலஸ் ஹோட்டலுக்கு சென்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தலைமை சொல்வது யார் கேட்கிறார்களோ அவன்தான் தொண்டர்கள். தொண்டர்கள் சொல்லி தலைவன் கேட்க கூடாது. கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை இருக்க வேண்டும். நான் முதலைமைச்சர் பதவியை விரும்பாததை செயலாளர்கள் ஏற்கவில்லை என்றார்.
மேலும் நான் முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று சொன்னதும் தியாகம் பண்ற மாதிரி நான் பெரிய தியாகி மாதிரி சொல்வதாக நினைக்கிறார்கள். இப்போ சொல்றேன் 2017 டிசம்பர் 31 ல் அப்பவே சொல்லிட்டேன். முதல்வர் பதவியை நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. அரசியலுக்காக பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டிருந்தால் 1996ல் வந்திருப்பேன். அது வேண்டாம் என சொல்லிவிட்டேன். 45 வயதில் எனக்கு பதவி ஆசை இல்லை 68 வயதில் எனக்கு பதவி ஆசை வருமா. அப்படி வந்தா நான் பைத்தியக்காரன் இல்லையா என்றார்.மேலும் எப்பவுமே வெளிப்படையாக தான் நான் சொல்வேன். எனக்கு வந்து ஒரு மாற்று அரசியல் கொண்டு வரணும் என்றார்.