Categories
தேசிய செய்திகள்

“மதுபான ஊழல் வழக்கு”…. முதல் மந்திரியின் மகளிடம் கிடுக்குப்பிடி விசாரணை…. அதிகாரிகள் தகவல்…!!!!!

முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியில், மதுபான கொள்கையை எளிதாக்கி தனியார் மதுபானக் கடைகளுக்கு அனுமதியும், சலுகைகளும் வழங்கியதில் பெரும் ஊழல் அரங்கேறி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தில் துணை முதல் மந்திரி மணிஷ்சிசோடியா மீதும் நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. எனினும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என பாஜகவை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.

தற்போது இவ்விவகாரத்தில் அதிரடி திருப்பம் ஒன்று ஏற்பட்டது. அதாவது, இந்த ஊழல் வழக்கில் தெலுங்கானாவின் முதல்மந்திரி சந்திரசேகராவின் மகள் மற்றும் மேலவை உறுப்பினரான கவிதாவுக்கு(44) தொடர்புள்ளது என பாஜக தலைவர்களான பர்வேஷ்வர்மா, மஞ்சிந்தர்சிங் சிர்சா போன்றோர் சென்ற ஆகஸ்டு மாதம் குற்றம்சாட்டினர். இந்த சமபவத்தில் கவிதாவிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ள முடிவு செய்தது. இதுகுறித்து அவருக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது.

அதில், அதிகாரிகள் காவிதாவிடம் விசாரணை நடத்துவதற்கு டிச..11ஆம்  தேதி அவரது வீட்டுக்கு நேரில் வருவார்கள் என கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியிலுள்ள கவிதாவின் இல்லத்திற்கு, சி.பி.ஐ. அதிகாரிகள் வந்தனர். அவர்கள் கவிதாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். மேலும் பல கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான பதில்களைப் பெற்று அதிகாரிகள் பதிவுசெய்தனர். இந்த விசாரணையானது 7 மணிநேரம் நீடித்தது.

Categories

Tech |