Categories
தேசிய செய்திகள்

பெண் எம்.பி- க்கள், எம்‌.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசின் நடவடிக்கை என்ன….? காங்கிரஸ் எம்.பி கேள்வி…!!!!

மக்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி-க்கள், மாநில சட்டசபைகளில் பெண் எம்.எல்.ஏ-க்களின் பிரதிநிதித்துவம் குறித்தும், அவர்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜி அதற்கு பதில் அளித்து பேசியபோது, அரியானா, ஜார்கண்ட், பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 10 சதவீதத்திற்கும்  அதிகமான பெண் எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். அதேபோல் தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 19 மாநில சட்டசபைகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான பெண் எம்.எல்.ஏ-க்களே இருக்கின்றனர்.

குஜராத்தில் பெண் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 8.2 சதவீதமாக இருக்கிறது. அதே சமயம் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரே ஒரு பெண் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் நாடு முழுவதுமாக பார்க்கும் போது சராசரியாக 8 சதவீத பெண் எம்.எல்.ஏ-க்கள் தான் இருக்கின்றனர். அதேபோல் பெண் எம்.பி-க்களின் எண்ணிக்கை மக்களவையில் 14.94 சதவீதமாகவும் மாநிலங்கள் அவையில் 14.05 சதவீதமாகவும்  இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அபிஷேக் பானர்ஜி நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை கொண்டு வரும் திட்டம் அரசுக்கு உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்த கிரண் ரிஜிஜி, இது தொடர்பான அரசியல் சாசன திருத்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு முன்பாக அது குறித்த ஒருமித்த கருத்து ஏற்படும் விதமாக அனைத்து கட்சிகளும் கவனமாக விவாதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |