தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினி இன்று தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதன்பிறகு தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு போயஸ் கார்டனில் ரஜினி இன்று தன்னுடைய ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மேலும் நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் இருப்பதற்கு பிரார்த்தனைகள் என்று பதிவிட்டுள்ளார்.
Happy birthday to the Super Star of Indian Cinema @rajinikanth Sir.
Prayers for his long & healthy life! pic.twitter.com/B17sZbZUob
— K.Annamalai (@annamalai_k) December 12, 2022