பிரபல நாட்டின் ஐடி வல்லுனர் இந்தியா சர்வதேச சந்தையில் ஆட்சி செய்வதாக கூறியுள்ளார்.
சீன நாட்டில் உள்ள ஒரு பகுதியில் ஐடி வல்லுனரான மைக் லியு என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்தியா மற்றும் சீனாவின் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்து “இந்திய தகவல் தொழில்நுட்பத்தின் எழுச்சி” என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “எங்கள் நாட்டின் தொழில்நுட்ப வருமானம் பெரும்பாலும் உள்நாட்டிலிருந்து கிடைக்கிறது.
ஆனால் இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்கள் உலக சந்தையில் ஆட்சி செய்கிறது. இந்நிலையில் எங்கள் நாட்டின் தகவல் தொழில்நுட்ப வருவாயில் 95 சதவீதத்திற்கு அதிகமானவை உள்நாட்டு சந்தையில் இருந்து வருகிறது. எனவே நாங்கள் சர்வதேச சந்தையில் கால் பதிக்க வேண்டும் என்றால் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.