Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களே!…. மொபைல் எண், இமெயிலை அப்டேட் செய்வது எப்படி?… இதோ முழு விபரம்….!!!!

வீட்டில் இருந்தவாறு அனைத்து சேவைகளையும் மக்கள் பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் EPFO-ல் பல அப்டேட்டுகளை மத்திய அரசு செய்துள்ளது. நீங்கள் மொபைல் எண் மற்றும் இமெயில் போன்றவற்றை அப்டேட் செய்ய வேண்டும் எனில், வீட்டில் இருந்தவாறு அதனை நீங்கள் செய்து முடிக்கலாம்.

ஆன்லைன் மூலம் மொபைல் எண் மற்றும் இமெயிலை அப்டேட் செய்வது எப்படி?

# முதலில் EPFO உறுப்பினர் e-SEWA இணையதளத்துக்கு செல்லவேண்டும்.

# UAN சான்றுகளுடன் உங்களது கணக்கில் உள்நுழைய வேண்டும்.

# நிர்வகி தாவலுக்கு சென்று தொடர்பு விபரங்கள் விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

# தற்போது இருக்கும் மொபைல்எண் மற்றும் மின் அஞ்சல் ஐடி உங்களது திரையில் தோன்றும்.

# அதன்பின் நீங்கள் புதுப்பிக்க விரும்பும் விபரங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

# புது மொபைல் எண் (அ) மின் அஞ்சல் ஐடியை உள்ளிட்டு அங்கீகார பின்னை பெறக் கோரவும்.

# உங்கள் புது அஞ்சல் ஐடி (அ) மொபைல் எண்ணுக்கு 4 இலக்க பின் அனுப்பப்படும்.

# அந்த பின்னை உள்ளிட்டு மாற்றங்களை சேமிக்க வேண்டும்.

# உங்களது EPFO கணக்கு தற்போது புது பின் மற்றும் அஞ்சல் ஐடியுடன் புதுப்பிக்கப்படும்.

Categories

Tech |