உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் அருகே வருண் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயார் சந்தோஷ் தன்னுடைய பேத்தி ரியா அகர்வாலுடன் லால்குர்தி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் பாட்டியின் காதில் இருந்த ஒரு கம்மலை பறித்து விட்டு பைக்கில் வேகமாக சென்றனர். உடனே ரியா மிகவும் துணிச்சலாக மர்ம நபர்களை பைக்கிலிருந்து பிடித்து இழுத்து தள்ளி விட்டார்.
அதோடு அவர்களுடன் சண்டையிட்டு ஒரு கம்மலையும் பிடுங்கிவிட்டார். இதனையடுத்து மர்ம நபர்கள் ரியாவை தள்ளி விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து காவல்துறையினர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களின் மீது துப்பாக்கிச் சூடு அவர்களை பிடித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.