நாடாளுமன்றத்தில் மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் ராணுவத்தில் இருக்கும் காலி பணியிடங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, இந்தியாவில் உள்ள முப்படைகளில் 1.35 லட்சம் வீரர்களுக்கு காலி பணியிடங்கள் இருக்கிறது. இதில் ராணுவத்தில் மட்டும் 1.18 லட்சம் வீரர்களுக்கு காலி பணியிடங்கள் இருக்கிறது. அதன் பிறகு இந்திய கடற்படையில் 11,587 வீரர்கள், விமானப்படையில் 5,819 வீரர்களுக்கு காலி இடங்கள் இருக்கிறது.
இந்நிலையில் இந்திய ராணுவத்தில் மொத்தம் 40 ஆயிரம் இடங்களுக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய கடற்படையில் மொத்தம் 3,000 காலி பணியிடங்களும், விமானப்படையில் 3000 காலி பணியிடங்களும் அக்னிபத் திட்டத்தின் மூலமாக நிரப்பப்படும். மேலும் இந்திய ராணுவத்தில் வருடத்திற்கு சராசரியாக 60,000 காலி இடங்கள் ஏற்படும் நிலையில், 50,000 காலி இடங்கள் ராணுவத்தில் மட்டும் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார். மேலும் இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.