Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி இப்போ ஊரில் இல்ல!… இங்கே Wait பண்ணாதீங்க!…. ஏமாற்றமடைந்த ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன் 73-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். கடந்த சில வருடங்களாகவே தன் போயஸ் தோட்டவீட்டிற்கு வரும் ரசிகர்களை ரஜினி சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் ரஜினியை வீட்டில் காண ரசிகர்கள் எப்போதும் போல் கூடுவார்கள். அந்த வகையில் இந்த வருடமும் பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி தன் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.

பெரும்பாலான ரசிகர்கள் ரஜினி பார்க்க அதிகாலலை முதல் காத்திருந்தனனர். இந்த நிலையில் ரஜினியின் மனைவி லதா, “ரஜினி தற்போது ஊரிலில்லை. அவர் சார்பில் அனைத்து ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என செய்தியாளர்களை சந்தித்து கூறினார். இதன் காரணமாக ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததை வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |