Categories
அரசியல் மாநில செய்திகள்

எழுச்சி எனக்கு தெரியட்டும்… அப்போ நா வர்றேன்… அனல்பறக்க பேசிய ரஜினி!

எழுச்சி எனக்கு தெரியட்டும் அப்போ வர்றேன் என்று ரஜினிகாந்த் மேடையை தட்டி மாஸாக பேசிய வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

சென்னை  லீலா பேலஸ் விருந்தினர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், முதல்வர் பதவியை நான் நினைத்து கூட பார்த்தது இல்லை என்று கூறிய அவர், அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்கள் தேவை என்றார். 1. கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒருதலைமை என்றும், 2. தேர்தல் நேரத்தில் உருவாக்கப்படும் பதவிகள் அப்போது மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், 3. நேர்மையான திறமையான இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் மக்களிடம் எழுச்சி ஏற்பட்ட பின் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று  அதிரடியாக கூறினார். மேலும் பல்வேறு கருத்துக்களை அதிரடியாக தெரிவித்தார். இந்நிலையில் இன்று காலை முதல் ரஜினியின் ரசிகர்கள் ட்விட்டரில் , , ,   என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதனிடையே ரஜினிகாந்த் மாஸாக பேசிய ஒரு வீடியோ ஓன்று ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதில், அவர் பேசியதாவது, ரசிகர்களுக்கு நா சொல்றது என்னென்னா, இந்த விஷயத்த வந்து சும்மா இதுபன்னாம, மூலை முடுக்க இருக்கும் மக்கள் கிட்ட இதைப்பத்தி சொல்லுங்க. வருங்கால CM, வருங்கால முதலமைச்சர் அதெல்லாம் நிறுத்துங்க. மூலை முடுக்குல போய் நா வந்து ஆட்சிக்கு வரணும்  அப்படின்னு  சொல்லுங்க. எனக்கு தெரியட்டும் அந்த எழுச்சி எனக்கு தெரியட்டும் அப்போ வர்றேன் என்று மேடையை தட்டி மாஸாக பேசினார். எழுச்சி ஏற்பட்ட பின் அரசியலுக்கு வருவதாக ரஜினி கூறியதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |