Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது….? வலுக்கும் முக்கிய கோரிக்கை…!!!

6 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் எப்போது சாத்தியமாகும் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்தான் தொடர்ந்து இமாச்சலிலும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலாக உள்ளது. திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் என 2021 தேர்தலில் திமுக அறிவித்ததே தவிர நிறைவேற்றவில்லை. இதனை சாத்தியமாக்க வேண்டும்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்ற பிம்பம் தான் கட்டமைக்கப்பட்டிருந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை எந்த காலத்திலும் செயல்படுத்த முடியாது. பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது பேசுவதற்கு இனிப்பாக இருக்கும். நடைமுறைப் படுத்துவதற்கு மிகவும் கசப்பானதாக இருக்கும் என்பது தான் பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருந்தது.

ஆனால், அதையெல்லாம் முறியடித்து இராஜஸ்தான் மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியது. அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இந்த மாநிலங்களுக்கு முன்பே மேற்கு வங்கம் என 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது என்றார்.

Categories

Tech |