Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க!… “சில்லா சில்லா” பாட்டுக்கு வேற லெவலில் குத்தாட்டம் போட்ட சிறுமி…. வைரல் வீடியோ….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்தப் படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது.

கடந்த 9-ம் தேதி அனிருத் குரலில் துணிவு திரைப்படத்திலிருந்து சில்லா சில்லா பாடல் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் யூட்யூபில் 13 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளநிலையில் 24 மணி நேரத்தில், அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்நிலையில் சில்லா சில்லா பாடலுக்கு ஒரு சிறுமி வேற லெவலில் குத்தாட்டம் போட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |