இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரில் 56 பேர் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர்கள் ஆவர். மகாராஷ்டிராவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆக இருந்த நிலையில் இன்று 11 ஆக உயர்ந்துள்ளது.
கேரளா – 17, மகாராஷ்டிரா-11, உ.பி.-10 (வெளிநாட்டினர் – 1), டெல்லி – 6, கர்நாடகா – 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் லடாக் -3, ராஜஸ்தான் -1 (வெளிநாட்டினர் – 2), தெலுங்கானா – 1, தமிழ்நாடு -1, ஜம்மு & காஷ்மீர் – 1, பஞ்சாப் -1, ஹரியானா – (வெளிநாட்டினர் -14) என மொத்தம் 73 பேருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Ministry of Health and Family Welfare, Government of India: Total number of confirmed COVID-19 cases across India (including foreign nationals) is 73. pic.twitter.com/xO803rglYT
— ANI (@ANI) March 12, 2020
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,295லிருந்து 4,627 ஆகவும், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,176லிருந்து 1,26,139 ஆகவும் உயர்ந்துள்ளது.
சீனாவில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,158லிருந்து 3,169ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80,778லிருந்து 80,796ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 827ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.