Categories
உலக செய்திகள்

எண்ணெய் விவகாரம்….!! நாங்கள் எப்போதும் இந்தியா பக்கம் தான்… ரஷ்யா அதிரடி முடிவு….!!!!

ரஷிய துணை பிரதமர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

உக்ரைன்  மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்துகிறது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ரஷியா சர்வதேச அளவிலான எரிபொருள் விலையை உயர்த்தியது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜி 7 நாடுகள் கூட்டத்தில் ரஷியா இறக்குமதி எண்ணெய்க்கு  விலை உச்சவரம்பு நிர்ணயிப்பது என்று முடிவு செய்தது. அதேபோல் ஜி 7 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவில் இருந்து வாங்கும் எண்ணெய்  பீப்பாய் ஒன்றுக்கு 60 அமெரிக்க டாலர் தரப்படும் என முடிவை வெளியிட்டது.

இது குறித்து ரஷிய அதிபர் புதின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “முட்டாள்தனம் வாய்ந்த கருத்துகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு எண்ணெய்  விற்பனை கிடையாது. மேலும் பல நாடுகள் எங்களிடம் வந்து பேசினால் நாங்கள் அதைப் பற்றி யோசிப்போம். அது போன்று ஆதரவளிக்கும் நாடுகளுக்கான எண்ணெய்  உற்பத்தியை குறைப்போம். மேலும் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள  உச்சவரம்பு ஆனது  தற்போது எங்களின் எண்ணெய்  விலையுடன் ஒத்துப் போகின்ற அளவிலேயே உள்ளது. இதனால் அவர்களின் இந்த அறிவிப்பால்  எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என கூறினார்.

இதனையடுத்து ரஷியா மற்றும் இந்தியா இடையான வர்த்தகம் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது என இரு நாடுகளும் குறிப்பிட்டு இருந்தது.இதுகுறித்து ரஷிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜி 7 நாடுகள் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் விதித்த விலை  உச்சவரம்புக்கு இந்திய ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் இந்தியாவின் முடிவை எங்கள் பிரதமர் வரவேற்றுள்ளார். மேலும் இந்த ஆண்டு மட்டும் இந்தியாவின் எண்ணெய்  இறக்குமதி 163.5 லட்சம் டாலராக உள்ளது. உக்ரைனுக்கும் எங்கள் நாட்டிற்கும் போர் நடைபெற்ற போதிலும் இந்தியா எங்களிடமிருந்து எண்ணெய்  இறக்குமதியை  செய்து வந்தது என அந்த  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து ரஷிய துணை பிரதமர்  கூறியதாவது. எரிசக்தி நெருக்கடியான சூழலில் கூட பொறுப்புடன்  ஒப்பந்த கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றினோம். அதனால் தான் ஏற்றுமதி பல நாடுகளுக்கு நடந்தது. இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் மற்றும் இங்கிலாந்து நாடுகளின் இந்த காப்பீட்டு சேவைக்கு தடை உள்ளிட்ட விவகாரங்களை முன்னிட்டு இந்தியாவுக்கு ஆதரவளிப்பது என்ற முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். அதேபோல் இந்தியாவுக்கான குத்தகைக்கு ஒத்துழைப்பு மற்றும் திறன் கொண்ட கப்பல்களை கட்டமைப்பதற்கு நாங்கள் ஆதரவை வழங்க முன் வந்துள்ளோம் என கூறியுள்ளார்.

Categories

Tech |