லவ் டுடே திரைப்படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றதோடு வசூல் சாதனையும் படைத்தது. சென்ற நவம்-4 தேதி வெளியான இத்திரைப்படத்தில் ராதிகா, சத்யராஜ், யோகி பாபு, ரவீனா என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் பல கோடிகள் வசூல் செய்துள்ளது.
இத்திரைப்படத்தின் பட்ஜெட் 7 கோடியாகும். இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் 55 கோடியும் தமிழ்நாடு நிறுவனத்திற்கு கிடைத்த ஷேர் 25 கோடியும் கேரளா உரிமை 15 லட்சமும் கர்நாடகா ஷேர் 1 கோடியும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஷேர் 6 கோடியும் வெளிநாட்டு ஷேர் 9 கோடியும் சாட்டிலைட் உரிமம் 2.25 கோடியும் டிஜிட்டல் உரிமம் 5.25 கோடியும் ஆடியோ உரிமம் 25 லட்சம் என மொத்தமாக ரூபாய் 48.90 கோடி லாபம் பெற்றிருக்கின்றது. இதில் விநியோகஸ்தர்களின் கமிஷன் 10 சதவீதம் போக மீதம் 44.8 கோடி தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைத்திருக்கின்றது.