தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனையில் நமது மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.
நமது இந்திய மக்களுக்கு தரமான மற்றும் இலவச மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்பதை நினைவு கூறுவதற்காக ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி நல்வாழ்வு திட்ட தினம் கொண்டாடப்படுகிறது. அதேபோல் இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசியில் கொண்டாடப்பட்டது. இதில் மத்திய அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள், பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் நலவாழ்வு திட்டத்தை மக்களுக்காக சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல் நமது தமிழ்நாடு நல்வாழ்வு மையங்கள் மூலம் அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை 22 லட்சத்து 58 ஆயிரத்து 739 தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கான சான்றிதழ் மற்றும் கேடயத்தை தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதிஷிடம் மத்திய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வழங்கியுள்ளார்.