தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு தாலுகாவிற்குட்பட்ட எடத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, மாரி, தீபா, ருக்மணி, ரேகா, பரிமளா உள்ளிட்டோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, சென்ற 2021 ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் எங்கள் பகுதியில் சுமார் 350 பேரிடம் 500, 200 முறையில் 10 மாதங்கள் என்ற அடிப்படையில் தீபாவளி சீட்டு பிரித்து ஒருவரிடம் வழங்கினோம்.
இதன் மூலம் அவர் எங்களிடம் 15 லட்சத்து 21 ஆயிரத்து 600 பெற்றுக்கொண்டார். ஆனால் அவர் தீபாவளி சீட்டில் விளம்பரப்படுத்தியபடி பொருட்களோ பணமோ தராமல் தலைமறைவாகி விட்டா.ர் இது பற்றி தகவல் அறிந்து அவரின் வீட்டிற்கு சென்றபோது ஊர் பெரியவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள். இதனால் அவர் 40 நாட்களில் பணத்தை திருப்பிக் கொடுப்பதாக தெரிவித்தார் .ஆனால் 50 நாட்கள் ஆகியும் பணத்தை தரவில்லை .ஆகையால் இது பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.