கடகம் ராசி அன்பர்களே..!
இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும்.
புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருள் உதவியும் செய்வீர்கள். இயன்றதை மற்றவர்களுக்கு கொடுப்பீர்கள்.
தனவரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். தன்னம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். பயணங்கள் நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். செலவினை கட்டுப்படுத்துங்கள். பொருள்வரவு சிறப்பாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆபரண பொருட்களை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று பொதுக் காரியங்களில் நாட்டம் செல்லும். மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பீர்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலையே நிலவும். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சகமாணவர்கள் ஒத்துழைப்புடன் நடந்துக் கொள்வார்கள். விளையாடும் பொழுது எச்சரிக்கையை கடைபிடியுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு, சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம்பச்சை நிறம்.