Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்..! யோகம் உண்டாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும் நாளாக இருக்கும்.

கடுமையான வேலையை எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவார்கள். இன்று மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். ஆதாய பணவரவில் சேமிப்பு கூடும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். செலவினை குறைக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேவையான பண உதவியை பெற்று அனைவரிடத்திலும் நல்லபெயர் பெறுவீர்கள். உதவி செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். நினைத்தது நடக்கும் நாளாக இன்றைய நான் இருக்கும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். பக்குவமான பேச்சுமுறை வேண்டும். அனுசரித்து செல்ல வேண்டும். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வத்தை செலுத்துவார்கள். விளையாடும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 4.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |