பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான கலை விழா சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெறும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக முதல் கட்டமாக சென்னையில் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்க விருப்பமுள்ள கலை குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஐந்து நிமிட காட்சியை பதிவு செய்து கலை பண்பாட்டு, முகவரி மற்றும் செல்போனியன் உள்ளிட்ட விவரங்களுடன் அனுப்ப வேண்டும். இதனை டிசம்பர் 13ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் ஒரு குழுவில் இடம் பெற்ற கலைஞர்கள் வேறு எந்த குழுவிலும் பங்கேற்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.