Categories
தேசிய செய்திகள்

உஷார் மக்களே…! ஒரே போன் காலில் 50 லட்சம் அபேஸ்…. அழுது புலம்பும் தொழிலதிபர்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் பல்வேறு வழிமுறைகளில் நடந்து வருகிறபோது இப்படியான ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறை சார்பாகவும், வங்கிகள் சார்பாகவும் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் பணத்தை இழந்து ஏமாந்து வருகின்றனர். அந்த வகையில், டெல்லியில் தொழிலதிபர் வருவதற்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

அவர் அழைப்பை எடுத்துப் பேச முயற்சித்த போது எதிர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால் கட் செய்துள்ளார். பின் அவருக்கு வந்த மெசேஜில் அவருடைய வங்கி கணக்கிலிருந்து 50 லட்சம் ரூபாய் பிறருடைய கணக்கு மாற்றப்பட்டதாக வந்த தகவலால் அதிர்ந்து போய் உள்ளார். பின்னரே அது சைபர் கும்பலின் கைவரிசை என்பதை உணர்ந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். எனவே இது போன்ற மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

Categories

Tech |