தமிழ் திரைப்பட நடிகர் ஆன விஜய் சேதுபதி தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான், சேதுபதி உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களிடையே கவரப்பட்டார். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், விஜய் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளையும் வாங்கி உள்ளார். இவர் தன்னுடைய நடிப்பை எதார்த்தமாக ரசிகர்களுக்கு கொடுப்பதால் வெகுவாக ரசிகர்களால் ஈர்க்கப்படுகிறார்.
இந்நிலையில் சமீபகாலமாக நடிகர் விஜய் சேதுபதியின் உடலமைப்பு கேலிக்குள்ளானது. குறிப்பாக, ‘விக்ரம்’ படத்தில் என்ன இப்படி இருக்கிறார் என்று பலரும் விமர்சித்தனர். இந்நிலையில், அதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், உடல் எடை குறைத்த செல்பி புகைப்படத்தை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் குறுகிய காலத்திற்குள் இது எப்படி சாத்தியம்? என்று ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.