Categories
தேசிய செய்திகள்

3000 ரூபாய் பென்ஷன் தரும் போஸ்ட் ஆபீஸின் சூப்பரான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு திட்டங்கள் மூலம் பயனடைந்து வருகிறார்கள். அதில் மிக முக்கியமான ஒரு திட்டம் தான் மாத வருமான திட்டம். இந்தத் திட்டத்தில் ஒருமுறை பெரிய தொகையாக டெபாசிட் செய்தால் 6.6% வட்டி லாபம் கிடைக்கும். நீங்கள் முதலீடு செய்யும் தொகை இறுதியில் உங்களுக்கு அப்படியே திருப்பித் தரப்படும். அது மட்டுமல்லாமல் பென்ஷன் தொகையும் உங்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒரு நபர் அதிகபட்சமாக 4.5 லட்சம் வரையும் இணைப்பு கணக்காக இருந்தால் அதிகபட்சம் ஒன்பது லட்சம் ரூபாய் வரையும் டெபாசிட் செய்ய முடியும். இதன் உதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள்.

இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் பயனடைய விரும்பினால் அருகில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று மாத வருமான திட்டத்தில் கணக்கு தொடரலாம். பத்து வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க முடியும். இதற்கு ஆயிரம் ரூபாய் இருந்தால் மட்டுமே போதும் கணக்கு தொடங்கி விடலாம். இந்த திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தாலே உங்களுக்கு மாதத்திற்கு 275 ரிட்டன் கிடைத்து விடும். அதாவது வருடத்திற்கு 3300 கிடைக்கும். இதைவிட அதிகமாக டெபாசிட் செய்தால் கூடுதல் தொகை உங்களுக்கு கிடைக்கும். இதில் அதிகபட்சமாக 4.5 லட்சம் டெபாசிட் செய்தால் மாதத்திற்கு 2,475 பென்ஷன் வாங்கலாம். அதாவது வருடத்திற்கு 29 ஆயிரத்து 700 ரூபாய். ஐந்து வருடங்களில் உங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் லாபம் மட்டுமே ரூ.1,48,500 ஆகும்.

Categories

Tech |