இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி உள்நாட்டு மற்றும் அந்நிய ஆணைய டெபாசிட் களுக்கும் உடனடியாக வட்டி விகிதம் திருத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 10ஆம் தேதி முதல் புதிய வட்டி விகிதம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 444 நாட்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.30 சதவீதம் வட்டி வழங்கப்படும் . மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்திற்கு 7.25 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படும்.
டிசம்பர் 5ஆம் தேதி ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.35% உயர்த்திய நிலையில் தற்போது 6.25 சதவீதமாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது . இதனை தொடர்ந்து பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வரும் இடையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து வங்கிகள் வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் வாகன கடன் போன்ற வட்டி விகிதத்தை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது.