Categories
மாநில செய்திகள்

சென்னையில் 1000 மி.மீ மழை…. இம்முறை வரலாற்றை அடைவோமா….? தமிழ்நாடு வெதர்மேன் சுவாரஸ்ய ரிப்போர்ட்….!!!!!

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பருவமழை தொடர்பான ஒரு சுவாரசிய தகவலை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் முதல் டிசம்பர் வரை பருவமழை காலத்தில் சென்னையில் 1034 மில்லி மீட்டர் மழையும், கடந்த 2021-ம் ஆண்டு 1485 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆனால் நடப்பாண்டில் நேற்று மாலை 5.30 மணி வரை சென்னையில் 924 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் 1000 மில்லி மீட்டர் மழை வேண்டும் என்றால், இன்று 76 மில்லி லிட்டர் மழை பெய்ய வேண்டும். டிசம்பர் 19-ஆம் தேதி முதல் அதிக மழையுடன் நாம் வரலாற்றை நோக்கி செல்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் டிசம்பர் 16-ம் தேதி அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |