மலையாளத்தில் மோகன்லால் ஜீத்துஜோசப் கூட்டணிகளில் உருவாகிய “திரிஷ்யம்” திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் பாலிவுட்டிலும் அஜய் தேவ்கன், ஸ்ரேயா தபு போன்றோர் நடிப்பில் ரீமேக்காகி வெளியாகியது. எனினும் தென்னிந்திய மொழிகளைப் போன்று ஹிந்தியில் அப்படத்திற்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. மறைந்த டைரக்டர் நிஷிகாந்த் காமத் அப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்நிலையில் மலையாளத்தில் வெளியாகிய திரிஷ்யம்-2 திரைப்படம் முதல் பாகத்தைப் போன்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இந்தியிலும் அஜய் தேவ்கன், ஸ்ரேயா என அதே கூட்டணியில் இப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியது. இப்படத்தை அபிஷேக் பதக் இயக்கி இருந்தார். இந்த 2வது பாகத்துக்கு இந்தி ரசிகர்கள் மிகப் பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர். அதாவது, படம் வெளியாகி கிட்டத்தட்ட 23 நாட்கள் கடந்துள்ள நிலையில் 200 கோடி வசூல் கிளப்பில், இத்திரைப்படம் இடம் பிடித்துள்ளது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.