ஜி.வி.பிரகாஷ் -ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு பேரும் ஒரு படத்தில் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச் சந்திரன் என்பவர் இயக்குகிறார். இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துவரும் மாணிக் என்ற திரைப்படத்தை நட்மெக் புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிறுவனம் தான் மலையாளத்தில் அமலாபால் நடித்து வெளியாகிய தி டீச்சர் என்ற திரைப்படத்தை தயாரித்து உள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமாரே இசையமைக்கும் இப்படத்தில் தலைவாசல் விஜய், காளி வெங்கட், இளவரசி ரோஹினி உட்பட பலர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். இது பொழுதுபோக்கு நிறைந்த குடும்ப திரைப்படமாக தயாராகிறது..