பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஓடிடி இணையதளம் இரண்டு மொபைல் செயலிகள்,நான்கு சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஸ்மார்ட் டிவி செயலியை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெப் சீரிஸ் மூலம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் மாநிலத்தின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானை தளமாக கொண்ட ஓடிடியின் இணைய தளம், இரண்டு மொபைல் செயலிகள், நான்கு சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஒரு ஸ்மார்ட் டிவி செயலி ஆகியவற்றை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.