Categories
தேசிய செய்திகள்

எத்தனை பேர் வந்தாலும் கெத்து காட்டுவோம்…. பயந்து ஓடிய சீன வீரர்கள்…. 30 நிமிடத்தில் நடந்தது என்ன…???

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே லடாக் பகுதியில் மீண்டும் எல்லை பிரச்சனை தலைதூக்க தொடங்கியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா மோதல் ஏற்பட்ட நிலையில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு 2 முறை சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது. கடந்த 9-ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்க் செக்டார் எல்லை பகுதியில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் மோதிக் கொண்டதில் பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்க் செக்டர் யங்கட்சி என்ற எல்லைப் பகுதியில் 200 சீன வீரர்கள் மரக்கட்டையில் ஆணிகள் பொருத்தப்பட்ட ஆயுதங்கள், ஆணிகள் பொருத்தப்பட்ட இரும்பு கம்பிகள், மின்சாரம் போன்று ஷாக் கொடுக்கக்கூடிய டசீர்ஸ் போன்ற கொடூரமான ஆயுதங்களை கொண்டு வந்தனர். ஆனால் துப்பாக்கி மட்டும் கொண்டு வரவில்லை. அந்த சமயத்தில் இந்திய வீரர்கள் 50 பேர் மட்டுமே அங்கு இருந்தனர். அப்போது திடீரென சீன வீரர்கள் இந்திய வீரர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

கடந்த 2020-ம் ஆண்டு எல்லையில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு இந்தியா சார்பில் இரண்டடுக்கு பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், முதல் அடுக்கில் குறைவான வீரர்களும், 2-ம் அடுக்கில் அதிகளவிலான வீரர்களும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சீன வீரர்கள் 200 பேர் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், 2-ம் அடுக்கில் பாதுகாப்பில் இருந்த இந்திய வீரர்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி 30 நிமிடத்திற்குள் இந்திய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீன வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

சீன வீரர்கள் 200 பேர் இருந்த நிலையில், அவர்களை விட அதிக அளவில் இந்திய வீரர்கள் இருந்துள்ளதால் சீன வீரர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இருதரப்பு வீரர்களும் ஆயுதங்கள் பயன்படுத்தாமல் கற்கள் மற்றும் கைகளாலேயே சண்டை போட்டதில் 15-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அதோடு தொடர்ந்து சீன வீரர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட அவர்கள் சந்தையிலிருந்து பின்வாங்க தொடங்கியுள்ளனர். மேலும் இந்த மோதலுக்கு பிறகு சீனா மற்றும் இந்திய நாட்டின் உயர் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பிரச்சனை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Categories

Tech |