Categories
தேசிய செய்திகள்

செக் பண்ணுங்க…! SBI அக்கவுண்ட்ல காசு போயிருக்கும்…… காரணம் இதுதானாம்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வப்போது பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வரும் எஸ்பிஐ வங்கி கணக்குகளில் இருந்து சமீபமாக பலருக்கு 147.5 எடுக்கப்பட்டிருந்தது.

பலர் இதனை கவனிக்காமலே விட்டு இருக்கலாம். ஆனால் புகார் தெரிவித்தவர்களுக்கு விளக்கம் அளித்திருக்கும் SBI, அது டெபிட்/ATM கார்டுக்கான ஆண்டு சந்தா என்று கூறியிருக்கிறது. ஆண்டொன்றுக்கு சாதாரண கார்டுகளுக்கு 125 கட்டணமும் ஜிஎஸ்டியோடு சேர்த்து 147.5 வசூலிக்கப்படுகிறது.

Categories

Tech |