விஜய் மில்டன் இயக்கத்தில் சென்ற 2014-ம் வருடம் வெளியான படம் “கோலி சோடா”. இந்த படத்தில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, சீதா உட்பட பல இளம் நடிகர்-நடிகைகள் நடித்து இருந்தனர். இந்த படத்தில் சாந்தினி என்பவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இப்படத்திற்கு பின் சாந்தி நடிப்பில் பேர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. அதனை தொடர்ந்து நடிகை சாந்தினி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அழகிய ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது தன் கணவர் மற்றும் மகனுடன் சாந்தினி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.