வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டார்..
கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகிய இருவரின் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த அதிமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இருவரும் குற்றம் செய்ததற்கான எந்த வித முகாந்திரமும் இல்லை என கூறி வழக்கிலிருந்து விடுப்பதாக விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கிரிஸ்டோபர் உத்தரவிட்டார். தற்போது தொழில்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.