தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (டெட்) நடத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களின் உண்மை சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால், விண்ணப்பத்துடன் சான்றுகளை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு உண்மைத்தன்மை சான்றிதழை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு 2012, 2013, 2017, 2019 ஆகியவற்றுக்கான சான்றிதழ் திருத்தங்கள்,உண்மைத் தன்மை அனைத்தும் தேர்வு எழுதிய மாவட்ட அலுவலகங்களிலேயே மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.