Categories
சற்றுமுன் சினிமா மாநில செய்திகள்

பிகிலுக்கு ரூ 50 கோடி… மாஸ்டருக்கு ரூ 80 கோடி – விஜய்க்கு IT கொடுத்த சர்ட்டிபிக்கெட் ..!!

நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளார் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீபாவளிக்கு வெளியான பிகில் படம் வருமானம் தொடர்பான கணக்கை தவறாக கட்டியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு சொந்தமான AGS பட தயாரிப்பு நிறுவனம் ,  பைனான்சியர் அன்புசெழியன் , நடிகர் விஜய் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இதற்காக மாஸ்டர் படப்பிப்பில் இருந்த நடிகர் விஜயை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். தமிழக சினிமாவிலும் , அரசியலிலும் இது பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்த சோதனை முடிவில் அன்புச்செழியன் சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில்77 கோடி ரூபாய் ரொக்கப் பணமும், 1.5 கிலோ தங்கம் , ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

vijay income taxக்கான பட முடிவுகள்

அதேபோல நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம் , அன்புச்செல்வன் ஆகியோருக்கு சம்மன் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் நேரடியாக விசாரணைக்கு ஆஜராகினார்கள். இந்த நிலையில் கிடைக்கப்பட்ட ஆவணங்களை வைத்து சென்னை பனையூரில் இருக்கக்கூடிய நடிகர் விஜய் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த ஆய்வில் 8 அதிகாரிகள்  பங்கேற்ற இந்த ஆய்வு தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் நடிகர் விஜய் முறையாக கணக்கு காட்டி வரி செலுத்தியுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பிகில் படத்திற்கு 50 கோடியும் , மாஸ்டர் படத்திற்கு 80 கோடியும் சம்பளமாக பெற்ற்றுள்ளார் என்று தெரிவித்த நடிகர் விஜய் 2 படத்திற்கும் முறையாக வரி செலுத்தியுள்ளார் என்று தெரிவித்தனர்.

Categories

Tech |