தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தமிழக உயர் கல்வித்துறையில் 44 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்தார். அதில் சில ,
அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் நிர்வாகத்தின் மின்ஆளுமை நடைமுறைப்படுத்தப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் நிர்வாகத்தில் ரூபாய் 1 கோடி செலவில் மின் ஆளுமை நடைமுறைப்படுத்தப்படும்.
23 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு தொடர் இணைய வசதி ஏற்படுத்த 4.60 கோடி நிதி ஒதுக்கீடு.
கல்லூரி வளாகங்களில் ரூபாய் 2.50 கோடி செலவில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
அண்ணா பல்கலைக்கழகம் மதுரை மண்டல வளாகத்தில் ஹைட்ராலிக் மற்றும் பொருள் வலிமை ஆய்வகத்திற்கு ரூபாய் 1.54 கோடியில் கட்டப்படும்.
வேலூர் பெரியார் தொழில்நுட்ப கல்லூரியில் அமைப்பியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு துவங்க ரூபாய் 3.13 கோடி ஒதுக்கீடு.
சென்னை பல்கலைக்கழகத்தில் அனைத்து வளாகங்களிலும் மகளிர் பாதுகாப்பு வசதி மையம் நிறுவ ரூபாய் 1.50 கோடி ஒதுக்கீடு.
அரியலூர் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் விடுதியில் கூடுதல் தளம் ரூபாய் 2.20 கோடியில் கட்டப்படும்.
தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திற்கு மதுரையில் இணை இயக்குனர் அலுவலகம் ரூபாய் 1.14 கோடியில் ஏற்படுத்தப்படும்.
உதகை அரசு கலைக்கல்லூரி கட்டிடங்கள் ரூபாய் 8.20 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
கோவை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் விடுதியில் கூடுதல் தளம் ரூ.3.50 கோடியில் கட்டப்படும்.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி கட்டடங்கள் ரூபாய் 240 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
அண்ணா பல்கலையில் உணவக கட்டடம் மற்றும் இயந்திரவியல் துறையில் ஆய்வு கட்டடம் கட்டப்படும்
கல்லுரிக் கல்வி இயக்ககத்தில் 2-ம் கட்ட மின்ஆளுமை திட்டம் ரூ.2.65 கோடியில் செயல்படுத்தப்படும்.
பெரியார் பல்கலையில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் கட்டடங்களுக்கு கூடுதல் தளங்கள் கட்டப்படும்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிய மகளிர் விடுதி கட்டடம் கட்டப்படும்.
மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் ஒரு சட்ட அலுவலர் பணியிடம் ரூபாய் 12.50 லட்சத்தில் தோற்றுவிக்கப்படும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க ரூபாய் 2.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயர் மருத்துவ அறிவியல் மூலம் அமைக்கப்படும்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 300 காரணிகளுடன் கூடிய மொழி ஆய்வகம் ஏற்படுத்தப்படும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதி ரூபாய் 16 கோடி நிதி ஒதுக்கீடு.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ 20 கோடி நிதி ஒதுக்கீடு.
மேற்கு தொடர்ச்சி மலையின் அழிவின் விளிம்பில் உள்ள தாவரங்களை பாதுகாக்க பாரதியார் பல்கலையின் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.
தமிழ்நாடு ஆவணக் காப்பக ஆவணங்களை செப்பனிடுதல், மின் உருவாக்கம் செய்தல் பணிக்களுக்கு 16 கோடி நிதி ஒதுக்கீடு.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூபாய் 3 கோடி செலவில் தாவர நெகிழி பயன்பாடு மையம் அமைக்கப்படும்.
தமிழ்நாடு ஆவணக் காப்பகம் சென்னை கட்டிடம் ரூபாய் 9.14 கோடியில் புனரமைக்கப்படும்.