Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு!…. 1 இல்ல 2 இல்ல…. 450 மருத்துவ பரிசோதனைகள் இலவசம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற உதவிய மக்களுக்கு 450 வகையான மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதாக தில்லி அரசு அறிவித்து இருக்கிறது. வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார ஆரம்ப மையங்களில் 450 வகையான மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதாக தில்லி அரசு தெரிவித்து உள்ளது. இப்போது தில்லி அரசால் இலவசமாக மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கையானது 212ஆக இருக்கிறது.

இந்நிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு சுகாதாரத்துறைக்கு அனுப்பியிருக்கும் அறிக்கையில், மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார ஆரம்ப மையங்களில் மேலும் 238 மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எதுக்குமாறு தெரிவித்துள்ளது. இவ்வசதிகள் அனைத்தும் தில்லி மக்களுக்கு மேலும் பயன் உள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |