மண்புழுக்கள் புரதச்சத்து அதிகளவு கொண்டுள்ளதால், வரும் காலங்களில் பொதுமக்களால் விரும்பக்கூடிய உணவாக மாறும் என லாட்வியா (Latvia) நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
மண்புழுக்கள் இறைச்சியில் இருக்கும் அதே அளவு புரதத்தை கொண்டுள்ளதாக லாட்வியா நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் இல்கா கெட்ரோவிகா (Ilga Gedrovica) என்பவர் தெரிவித்துள்ளார். அதேபோல காய்ந்த மண்புழுவில் 3 மடங்கு அதிக புரதம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இறைச்சிக்காக மக்கள் மற்ற விலங்குகளை வளர்ப்பதைவிடவும் மண்புழு வளர்ப்பது மிகவும் செலவு குறைவு என்றும், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதாலும் மண்புழு உணவுகள் அதிக வரவேற்பை பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.